இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Friday, December 31, 2010

நிர்வாண கோலத்தில் சீன பெண்ணின் உடல் நீச்சல் குளத்தில்!

 சிங்கபூர் sentosa cove bungalow house வீட்டில் சீன பெண்ணின் உடல் நீச்சல் குளத்தில்முழு நிர்வாணா நிலையில் இறந்து கிடந்தார். காலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்யும் வீட்டின் பணிப்பெண் இத பார்த்து வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே ஓடி வந்து பக்கத்து வீட்டு காரர்களிடம் சொல்கிறார்


















போலீஸ் விசாரணையில் இவரின் பெயர் Ms Li Hong Yan, 24, சீன குடிமகள் என்பதும் இங்கு உள்ள pup ஒன்றில் பணிபுரிந்து வந்து இருக்கிறார், இவர் எப்படி இங்கு வந்தார்?





Mr.Adrian chua Boon Chye



 Mr.Adrian Chua Boon Chye,39  சிங்கபூர் ரியல் எஸ்டேட்  கிங்,  Roundhill Capital நிறுவனத்தின்    நிறுவன தலைவர் பல பில்லியனுக்கு சொந்தக்காரர்
நிறைய படித்து இருக்கிறார் ரெண்டு முதுகலை பட்டம் வெளிநாடுகளில் படித்தவர் ஆனால், இன்னும் திருமணம் ஆக வில்லை.சிங்கபூர் ல நெறைய  இப்படித்தான் திருமணம் ஆகாத பேச்சிலர்  காரணம்  ஒன்று
பொருளாதாரம் குடும்பத்தை வழி நடத்த தேவையான வருமானம்
இல்லாதது   ஏன் என்றால் இங்கு உயர்ந்த வாழ்க்கை தரம் எல்லாவற்றிக்கும் காசு அதனால் எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை,கொடுப்பது போல கொடுத்து வாங்கி விடுவார்கள், ரெண்டாவது கேர்ள் பிரன்ட் அல்லது பாய் பிரன்ட் அவரவர்
தகுதிக்கு  தகுந்தார் போல் கிடைப்பது இல்லை ,இன்னும் இங்கு படிக்காதவர் பாடு படும்  திண்டாட்டம்தான்   உள்ளுரில்   பெண் கிடைப்பது     குதிரை கும்பு! பக்கத்து நாடுகளுக்கு (combodia,vietnam,china)  சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள் உள்ளுரில் திருமணம் செய்தாலும் குழந்தை பெற்று கொள்வதில்லை சிங்கபூர் இன் பிறப்பு விகிதம் சரிந்து கொண்டே போகிறது  அரசாங்கம் நிறைய சலுகைகள்    அறிவித்தார்கள் ஆனால் யாரும் குழ்ந்தை பெற்றுகொள்வது மாதிரி தெரியவில்லை!!

எல்லாத்துக்கும் வெளி நாட்டுகாரர்களை நம்பி உள்ளது மாதிரி இதுக்கும்  ஏதாவது  திட்டம்  இருக்கா???

ஆனால் Mr.Adrian Chua Boon Chye எல்லாம் இருந்தும் திருமணம் செய்துகொள்ளவில்லைஏனோ தெரியவில்லை? சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் setnosa cove வில் இந்த வீட்டை $20 million க்கு வாங்குகிறார்,இந்த வீட்டில்  ஒரு  மியன்மார் நாட்டு பணிப்பெண்ணை  வேலைக்கு வைத்திருக்கிறார்.
ஒரு ஆளுக்கு தனிய எவளவு ஆடம்பரமான வீடு? ஒரு மாத வாடகை $28,000















வீட்டின் தனி தோற்றம்

















Ms.Li Hong yang சிங்கபூர் க்கு சென்ற ஆண்டு 2009   இங்கு உள்ள ஒரு இந்திய உணவகம் ஒன்றில் துணை மேற்பார்வையாளராக பணியில் சேர்கிறார்.இரவு நேரங்களில் ஒரு  பெரிய pub ஒன்றில் தற்காலிக உபசரனையளராக பணியில் சேர்கிறார் தன் செலவு
போக மிதி பணத்தை  பெற்றோர்க்கு  அனுப்பி வைக்கிறார்.

 2010 பிப்ரவரி  சீன புத்தாண்டுக்கு சீனாவுக்கு சென்று  பெற்றோருடன் புத்தாண்டை
கொண்டாடி விட்டு சிங்கபூர் திரும்புகிறார், வேலை பார்த்து வந்த இந்திய
உணவகத்திலிருந்து வேலையில் லிருந்து நின்று விட்டு முழு நேர pup
உபசரனையளராக வேலையை தொடர்கிறார்,இங்குதான் இவர்கள் இருவர்க்கும் தொடர்பு ஏற்படுகிறது.


Chinese National Li Hong Yan (left),24 whose naked
body was found in the lap pool of a bungalow,
has been said to resemble Chinese actress Zhang Zigi(right)




Chua இவரை செல்லமாக "Wawa"  என்றுதான் கூப்பிடுவாராம் பல முறை வெளியே
அழைத்து சென்று இருக்கிறார்.பல இரவுகள் இவரின்  வீட்டில் உல்லாசமாக இருந்து இருக்கிறார்கள்.ஒரு நாள் இரவுக்கு $800 dollor பணம் கொடுப்பாராம்.இது  Li  இன்  ஒரு மத சம்பளத்திற்கு இணையானது. "Wawa" என்றால் சீனத்தில் பொம்மை என்று பொருள் .



Ms.Li Hong Yan

March 23,அன்று  இரவு Mr.Chua  தன் ஜப்பானிய  வர்த்தக  நண்பர்களுக்கு  Las Vigas KTV
Lounge இல் விருந்து கொடுக்கிறார், Li யையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறார்
இவர் தன் நான்கு நண்பர்களுடன் அங்கு செல்கிறார்.

பார்ட்டி களை கட்டுகிறது நண்பர்கள் நான்கு பேரும் சேர்ந்து 2 Chiva Regal full bottle
Whisky யை காலிசெய்கிறார்கள் இரவு மணி 2.30 ஆகிறது மற்றவர்கள் பார்ட்டியை
தொடர,chua, லி யை அழைத்துக்கொண்டு டாக்ஸி யில் இவர் வீட்டுக்கு போகிறார்.


அங்குள்ள செக்யூரிட்டி டாக்ஸி யை  சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கிறார்
Chua , Li யை அழைத்துக்கொண்டு மேல் மாடி படுக்கை அறைக்கு சென்று இருவரும்
கலவியில் முழ்கிறார்கள்.

Chua அசதியில் உறங்கிவிடுகிறார் விடியற்காலை  சுமார் 7.30 மணிக்கு போலீஸ் வந்து
படுக்கையில் எழுப்புகிறது அப்பொழுதுதான் அவருக்கு தெரியவருகிறது  லி நீச்சல்
குளத்தில்  இறந்து கிடப்பது!  அதிர்ச்சி!!! எப்படி இறந்திருப்பார் விடியற்காலை வரை தன்னுடன் படுக்கையில் இருந்தவர்??

அவருக்கும் ஒன்றும் புரியவில்லை போலீஸ் க்கு தலை சுற்றுகிறது, போலீஸ் பல
கட்டங்களில்  விசாரணையை தொடர்கிறார்கள்.

முதலில் இதை பார்த்தவர் பணிப்பெண் வீட்டை விட்டு அலறி அடித்து ஒடியாந்தவர்!
போலீஸ் இவரிடம் விசாரணையை தொடங்குகிறது, வழக்கம் போல இவர்  காலை 6 மணிக்கு எழுந்து வெளியே வருகிறார் நீச்சல் குளத்திற்க்கு இட்டு செல்லும் கதவு
திறந்து இருக்கிறது சிறிது தூரத்தில் பெண்ணின் உடைகளும் முதலாளியின்
லைட்டரும் கிடக்கிறது இன்னும் இருட்டாக்க இருப்பதால் வேறு ஒன்றும்
தெரியவில்லை பிறகு வீட்டின் வாசலில் ஒரு பெண்ணின் காலணிகள் கிடக்கிறது
இது வழக்கமா உள்ளதுதான் முதலாளி இதுபோல் இரவு நேரங்களில் நிறைய பெண்களை  அழைத்துவருவாராம்!!!  இதனால் இவர் பிற வேலைகளை தொடர்கிறார்


கொஞ்ச நேரம் சென்று சுமார் 7 மணிக்கு திரும்ப நீச்சல் குளம் பக்கம் செல்கிறார்
அப்போழ்துதான் இறந்த பெண்ணின் உடலை பார்த்து வெளியே ஓடி வருகிறார்.
வீட்டிற்குள் திரும்ப செல்வதற்கு பயம் அதனால் போகவில்லை.போலீஸ் க்கு
ஒன்றும் துக்கு துலங்கவில்லை .

Chua வை விசாரிக்கிறார்கள் அவர் நடந்த எல்லாவற்றைவும் சொல்கிறார் இதற்க்கு முன்  முன்று முறை Li  யை இந்த வீட்டிற்கு அழைத்துவந்திருக்கிறார்  சிகரட்
குடிக்க இருவரும் நீச்சல் குளம் பக்கம் வருவார்களாம் .லி க்கு நீச்சல் தெரியாது
கிராமத்தில் வளர்ந்தவர் நீச்சல் பழகவில்லை  என்பது போலீஸ் க்கு இவரின்
பெற்றோர் முலம் உறுதிபடுத்திகொள்கிறார்கள்.

போலீஸ் வீட்டை சோதனை செய்கிறார்கள் முதலில் இவரின் படுக்கை அறை அங்கு
லி யின் உள்ளாடைகளும் சில பயன்படுத்திய மற்றும் பயன்படுத்தத ஆணுறைகளை
கைப்பற்றுகிறார்கள் வேறு ஒன்றும் சிக்கவில்லை.




Chua  வின் வீட்டில் உள்ளே நடப்பவைகளை கண்காணிக்க CCTV வசதி உள்ளது  அதனை
கைபற்றி  சோதிக்கிறார்கள் .இருவரும் இரவு 2.45 மணிக்கு உள்ளே வருகிறார்கள்
Chua  Fridge லிருந்து ஒரு லெமன்  டி யை  எடுத்து அருந்துகிறார்  Li Tiger Beer can ஒன்றை
எடுத்து அருந்துகிறார் இருவரும் மேல் மாடிக்கு செல்கிறார்கள் அதற்க்கு மேல் ஒன்றும் அதில் பதிவாகவில்லை!!


மீண்டும் CCTV  யில் 3.48 மணிக்கு Li  தனியே கிழே இறங்கி வந்து வெளியே செல்கிறார் இவளவுதான் அதில்  பதிவாகிருக்கு

சீனாவில் உள்ள அவரின் பெற்றோருக்கு தெரியபடுத்துபடுகிறது அவர்களால் நம்ப
முடியவில்லை ரெண்டு நாள் முன்னர்தான் எங்களுடன் பேசினால் நன்றாகத்தான்
பேசினால்.

Li  யின் அப்பா(Mr.Li Kui you) ஒரு சோயா பீன் விவசாயி மிக ஏழ்மை ,லி சீனாவில்
சிகை அலங்காரம் படித்துவிட்டு,சிங்கப்பூர் இல் அந்த வேலை தான் பார்த்து
வருவதாக பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்.இவரின் பெற்றோர்கள் சிங்கப்பூர்
வருவதற்கு ஏப்ரல் 16 தேதி ஆகி விட்டது .அதற்க்கு அவர்கள் பட்ட சிரமங்களையும்
கஷ்டங்களையும் படிக்க இங்கே சொடுக்கவும் .சிங்கபூர் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

Li யின் உடலை  சோதித்ததில்  CORONER இப்படியான முடிவுக்கு வருகிறார்.நீச்சல்
குளத்தில் இறங்க முடிவு செய்து ஆடைகளை அகற்றிவிட்டு உள்ளே சென்று
இருக்கலாம், இவருக்கு நீச்சல் வேறு தெரியாது She probably got into difficulties as she
stepped into the deepest part of  the pool , Coroner said .

ரத்தத்தில் 125mg/100ml of  ethonal  கலந்து இருக்கிறது இது அங்கிகரிக்கப்பட்ட Drunk-Drive
அளவான  70mg க்கு மேல் அதிகம்.The coroner ruled out foul play as there was no evidance or injuries
to indicate she was attacked.

நீதிமன்றத்தில் Li யின் பெற்றோர் முன்னிலையில் chua  விசாரிக்கபடுகிறார் அவர்களும்  அவரின் வக்கீல் மூலம் கேள்வி கேட்கிறார்கள். Li யின் பெற்றோரால் மகளின் நடத்தைகளை நம்பமுடியவில்லை,இது மாதிரி தெரிந்து இருந்தால் நங்கள் இங்கு அனுப்பி இருக்கமாட்டோம் என்று கதறுகிறார்.


Li  யின் பெற்றோர்

Li Kui yui  தீர்ப்பை ஏற்று கொண்டாலும்  Chua  வின் மேல் கோபம் குறையவில்லை.என் மகள் அவர் வீட்டுக்கு சென்று இருக்கிறார் அவர்தான் மகளுக்கு முழு பாதுகாப்பு
கொடுத்து இருக்கவேண்டும் .நான் ஒரு விவசாயிதான் எனக்கு ஒன்றும் அவளவு
தெரியாது அனால் வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு வீட்டு ஒனர் தன் முழு பொறுப்பு
ஏற்கவேண்டும்.

இந்த செய்தி யின் ஆங்கில நாளிதழை படிக்க இங்கே சொடுக்கவும் .

No comments:

Post a Comment