இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Saturday, December 18, 2010

ஹனிமூன் அழைத்து சென்று மனைவியை கொன்ற கணவர்

Shrien Dewani வயது 30,லண்டனின் மிக பெரிய இந்திய பணக்காரர் மற்றும் தொழிலதிபர் இவர் அப்பாவுக்கு லண்டனில் நிறைய முதியோர் பராமரிப்பு மையங்கள் உள்ளன.வீட்டின் பெற்றோர் சம்மத்துடன் தான் விரும்பிய காதலி அனி யை   வயது  28,  கைபிடித்தார். திருமணம்  மிக  விமர்சையாக ஆடம்பரமாக  இந்தியா மும்பையில்  நடந்தது .



திருமணம் முடிந்ததும் ஆசை மனைவியை அழைத்துக்கொண்டு திட்டமிட்டபடி   5 நாட்கள்  ஹனிமூன்  பயணம் SOUTH AFRICA வுக்கு   ,உறவினர்கள் மகிழ்ச்சியாக வழி அனுப்பி வைகிறார்கள் .

புதுமண தம்பதிகள் இருவரும் CAPTOWN விமான நிலையம் வந்து  இறங்கிஅங்கு நின்ற டாக்ஸி  ஒன்றில் ஹோட்டல் சென்று பயண களிப்பில்! மன்னிக்கவும் (கலைப்பில்)  ஓய்வு எடுகிறார்கள்.மறுநாள் CAPETOWN நகரை சுற்றி உள்ள சுற்றுலா பகுதிகளை சுற்றிபார்க்கிறர்கள்.அனி ஸ்வீடன் னில் படித்து வளர்ந்தவர் அதனால் SOUTH AFRICA வின்   SUB-URBAN  பகுதியை பார்க்க வேண்டும் என்று கணவரிடம் சொல்கிறார், கணவரும் மனைவியை அழைத்துக்கொண்டு டாக்ஸி எடுத்துக்கொண்டு மீண்டும் அதே டாக்ஸி டிரைவர் Zola Tongo முதல் நாள் ஏர்போர்டில்  வந்த டாக்ஸி இருவரய்வும்  அழைத்துக்கொண்டு  Gugulethu  பகுதி நோக்கி செல்கிறது  டிரைவர் போனில் வேறு ஒருவருடன்   பேசி கொண்டுவருகிறார்  சற்று நேரத்தில் அதாவது பயணத்தின்  3 வது நிமிடத்தில் இரண்டு உள்ளுர்வசிகளால் துப்பாக்கி முனையில் இவர்களின் கார் கடத்தபடுகிறது.

கடத்தல்கரர்கள் டிரைவரை வண்டியை விட்டு தள்ளிவிடுகிறார்கள்,வண்டி வேறு ஒரு பகுதியை  நோக்கி செல்கிறது    கடத்தல்காரர்களிடம்   கெஞ்சுகிறார்  புது மாப்பிள்ளை  எங்களை விட்டு விடுங்கள் எவளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் மனைவியை கட்டிபிடித்துகொன்டு அழுகிறார் வண்டியை விட்டு குதிக்க முயற்சிகிறார்கள் ஆனால், பலனில்லை கடத்தல்காரர்கள் விடுவதாக இல்லை.

இருவரையும் ஒன்றும் செய்ய மாட்டோம் என்கிறான், மாப்பிள்ளை மனைவியை கட்டிபிடித்துகொன்டு இவளை ஒன்றும் செய்துவிடாதிர்கள் என்று கெஞ்சுகிறார் நங்கள் இருவரும்  கிழ  குதித்து சாகிறோம் என்று கெஞ்சுகிறார்.எங்களுக்கு நீங்கள் இருவரும் முக்கியமில்லை இந்த வண்டிதான் வேண்டும் என்கிறான்  கடத்தல் பேர்வழி. கொஞ்சம் நிம்மதியாக  
மாப்பிள்ளை மூச்சு விடுகையில்  மாபிள்ளையை வண்டியை விட்டு வெளியே தள்ளுகிறார்கள்.

மாப்பிள்ளை தனி ஆளாக போலீஸ் ஸ்டேஷன் வந்து கம்ப்ளைன்ட் தருகிறார் சவுத் ஆப்ரிக்கா போலீஸ் டீம் CAPE TOWN அருகே கைவிடப்பட்ட வண்டி ஒன்றை சோதனை இடுகிறார்கள் வண்டி முழுவதும் ரத்த உறைந்து காணபடுகிறது புது மனைவி தலையில் மூன்று குண்டு காயத்துடன் இறந்து கிடக்கிறார் 
புதுமாப்பிள்ளை  தனி ஆளாக லண்டன் திரும்புகிறார் , லண்டனின் எல்லா பத்திரிகைகளிலும்  தலைப்பு செய்தியாக வருகிறது இந்த செய்தி,  பத்திரிகைகள் அங்கு நடக்கும் குற்ற செயல்களை கிழி கிழி என்று கிழிகிறாக்கள்
கடந்த ஆண்டு மட்டும் சவுத் ஆப்பிரிக்காவில் 13,902 கார் கடத்தல்கள்,18,148 கொலைகள்,எண்ணற்ற கற்பழிப்புகள் என்று பாட்டியல் நீண்டு கொண்டு போனது அது உண்மைவும் கூட உலகத்திலே அதிகம் குற்ற செயல நிறைந்த நாடுகளில் சவுத் ஆப்ரிக்கா விற்கு  முதல் இடம் .இந்த கொலை இரு நாட்டு பத்திரிக்கைகளுக்கும் இடைய பெரிய யுத்தமாக மாறியது ஒன்றை ஒன்று குறை கூறி சண்டையிட்டுகொண்டன.

இந்த கொலையால் சவுத் ஆப்ரிக்கா வின் சுற்றுலா துறைக்கு மிக பெரிய இழப்பு  சுற்றுலா துறைக்கும் மட்டும்மல்ல நாட்டுக்கும் கேட்ட பெயர் பொங்கி எழுந்த காவல் துறை நம்ம விருதகிரி மாதிரி ஒருத்தரை நேயமிச்சு இரண்டு  நாட்களில்  குற்றவாளிகளை டிரைவர் Zola Tongo உட்பட கைது செய்து விசாரித்தது இதற்க்கு மேலதான் நெறைய திருப்பங்கள்

டிரைவர் Zola Tongo

ZOLA TONGO வை போலீஸ் நைய புடைத்ததில் அவர் வாக்குமுலம் குடுத்து இருக்கிறார் லண்டன் னிலிருந்து ஒரு தொழிலதிபர் என்னை தொடர்பு கொண்டு 1400 POUND தருகிறேன் என் மனைவியை கொன்று விடு என்று சொன்னதாகவும் அதற்க்கு தான் ஒப்புகொண்டதகவும் போலீஸ்  இல்   வாக்குமுலம் தருகிறார் .இந்த தகவலை சவுத் ஆப்ரிக்கா போலீஸ் லண்டன் போலீஸ் க்கு தெரிவிக்கிறது .லண்டன் போலீஸ் புதுமாப்பிள்ளை கைது செய்கிறார்கள்.
 அனி யின் பிரேத பரிசோதனையில் அவர் கற்பழிப்புக்கோ வேறு எந்த தாக்குதலுக்கும் ஆளாகவில்லை, காருக்காக  கடத்தியவர்கள் ஏன் அனி யை கொலை செய்ய வேண்டும் சவுத் ஆப்ரிக்கா போலீஸ் இன்   சந்தேகம்                      வலுக்கிறது  அதனால் சவுத் ஆப்ரிக்கா போலீஸ் SHERIN DEWANI  யை நங்கள் விசாரிக்க வேண்டும் என்கிறது.

SHERIN DEVANI  இன் வக்கீலும், குடும்பத்தாரும் சவுத் ஆப்ரிக்கா அன் நாட்டின் பெயரையும் சுற்றலா துறையவும் காப்பாற்ற இது  ஒரு புது நாடகம் என்கிறார்கள்,DEVANI யை பெயிலில் விட கூடாது என்ற சவுத் ஆப்ரிக்கா வின்  வேண்டுகோளை  மறுத்து இவரை வக்கீல் 240,000 POUND  பெயிலில் வெளிய எடுத்து இருக்கிறார்  வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது .விரைவில் உண்மை வெளிய வரும் .இது பற்றிய செய்திகளை படிக்க இங்கே click kavum  

இந்த வீடியோ பாருங்கள்
     
  

அன்பு நண்பர்களே இது என் முதல் பதிவு தவறுகளை மன்னிக்கவும்!!! நிறைய  வலை பூ படித்துவிட்டு வந்த ஆர்வத்தில நாமலும் எதாவது கிறுக்கலாம் என்ற ஆர்வத்தில்.TAKE IT EASY!!! 



1 comment: