ஆவல் நிறைவேறியது. எப்பொழுது இந்திய கால்பந்து அனி உலக அரங்கிற்கு வர போகிறது
அது தன்னுடைய திறமையை உலகிற்கு கண்பிக்கபோகிறது என்று ஒரு கால்பந்து ஆர்வலன் என்ற வகையில் காத்துகொண்டு இருந்தேன் அதற்க்கான நேரம் கனிந்து விட்டது .
1984 ஆண்டிற்கு பிறகு 27 வருடங்களுக்கு அப்பால் ஆசியா கோப்பையில் இந்திய அனி
C பிரிவில் பலம் பொருந்திய குழுக்களான ஆஸ்திரேலியா , தென் கொரியா , பஹ்ரைன்
குழுவில் .
முதல் ஆட்டம் நேற்று 10-1-11 ஆஸ்திரேலிய உடன் உலக தர வரிசையில் இவர்கள் 20
ஆவது இடத்திலும்,இந்தியா 142 ஆவது இடத்திலும் ஆசியா கோப்பையில் மிகவும் பலவினமான அணி நம் அணி.
இந்திய அணியை THE BHANGARA BOYS என்றுதான் கூப்பிடுகிறார்கள் இந்தியாவின் கால்பந்து
பொற்க்காலம் என்றால் அதை 1950-60 எனலாம் இரண்டு முறை ஆசியா சாம்பியன், ஒரு
ஒலிம்பிக் சாம்பியன் ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவை 4-1 கணக்கில் வென்றது அதன்
பிறகு இந்தியாவின் கால்பந்து திறமைகள் இந்திய அரசியல்வதிகளால் இந்து மகா
சமுத்துரத்திலும் , அரபிக் கடலிலும் முழ்கடிக்கபட்டன. மீண்டும் அவர்கள் நினைத்தால்தான்
வெளிகொண்டுவரமுடியும் .
உங்களுக்கு தெரிந்த ரெண்டு இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்களின் பெயேர்களை
சொல்லுங்கள் பார்ப்போம் அப்படி தெரிந்து இருந்தால் ஆச்சர்யம்! எனக்கு ஒருவரையும்
தெரியாது இந்த போட்டிக்கு முன்னால்.இதற்க்கு முழு கரணம் நம் மீடியா எப்பபார்த்தாலும்
கிரிக்கெட் அதை விட்டால் வேறு எந்த விளையாட்டும் தெரியாது.
ஆட்டத்திற்கு முன்னரே பத்திரிகைகள் கணித்துவிட்டன ஆஸ்திரேலியாவின் கோல்
எண்ணிக்கைகள் இரண்டு இலக்கத்தில் இருக்கும் என்று.நானும் மிக ஆர்வத்துடன் டிவி
முன்னால் நண்பர்களுடன் அமர்ந்துவிட்டேன்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை எல்லாம் தெரிந்த முகங்கள் 5 வீரர்கள் EPL
இங்கிலீஷ் பிரிமியர் லீகில் விளையாடுபார்கள். இந்திய அணியில் இருந்து ஒருவர் அமெரிக்க MLS லீகில் Kansas City Wizards என்ற கிளப் க்கு Sunil Chhetri விளையாடுகிறார்.
![]() |
THE BHANGARA BOYS |
இரு அணிகளும் பதில் தாக்குதலில் ஒன்று மற்றதின் எல்லை வரை சென்றன.இந்தியா
பந்தை எடுத்துக்கொண்டு ஆஸ்திரேலிய எல்லைக்குள் முன்னேறினார்கள் எனக்கு ஆனந்தம் தாங்கவில்லை ஆனால் என் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை!
11 நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் Brette Emerton EPL இல் Black Burn Rover குழுவிற்கு விளையாடுகிறார் சமிபத்தில் இந்த குழுவை இந்தியாவின் VENKYS GROUP வாங்கி இருக்கிறது.இவர் வலபக்கமாக கொண்டுவந்த பந்தை TIM CAHILL கோல் ஆக்கினார்
ஆஸ்திரேலிய 1-0 என்று முன்னிலை.
ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியே இருந்தது ஆஸ்திரேலியாவின் பல முயற்சிகளை இந்திய கோல் கீப்பர் Subratra Paul Spider man போல பறந்து பறந்து தடுத்துவிட்டார் இவர் இல்லாவிடில் கணித்ததுபோல கோல் எண்ணிக்கை இரண்டு இலக்கை தொட்டு இருக்கும்.
ஆட்டத்தின் 25 வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் Harry Kewell இவர் முன்னால் liverpool
விளையாட்டாளர் மத்திய திடலிலிருந்து 30 meter தொலைவிலிருந்து உதைத்த பந்து இந்திய
வலைக்குள் புகுந்தது.இந்திய தற்காப்பு தடுத்திருக்க வேண்டும், ஆஸ்திரேலியா 2-0 முன்னிலை.
![]() |
Team India' Captain Climax |
கொடுத்து ஓட முடியவில்லை.கற்பந்தை பொறுத்தவரை நாம் குழந்தை 1950 களுக்கு பிறகு
இப்பதான் எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளோம், விரைவில் வேகமாக ஓடுவோம் என்ற
நம்பிக்கை உள்ளது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இன்னும் நிறைய கோல்கலை போடுவார்கள் என்று நினைத்து இருந்தேன் ஆனால் ஆஸ்திரேலியாவின் ஜம்பம் பலிக்கவில்லை இந்திய அனி மிக கட்டுகொப்பாக ஆடியது .
இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோல் மட்டும் தான் ஆஸ்திரேலிய வால் போட
முடிந்தது 4-0 என்று தோற்றாலும் முடிவில் இந்திய அணி ரசிகர்களின் மனதை கொள்ளை
கொண்டுவிட்டது என்று சொல்லவேண்டும். Well done Bhangara Boys!!!.
இவர்தான் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் Mr.Bob Houghton இங்கிலாந்த் நாட்டவர்
இவர் நம் பிரபல தமிழக அரசியல் தலைவர் போல் தோற்றமளித்தால் நான் பொறுப்பல்ல.
இந்தியாவின் மற்ற இரண்டு ஆட்டங்கள் பஹ்ரைன் னுடன் 14-01-11 மற்றும் தென் கொரியா
உடன் 18-01-10 தேதியும் நடை பெற இருக்கிறது.ரசிகர்களின் பலமான ஆதரவு தேவை.
please supporte indian football. back to glory again .மற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற
வாழ்த்துக்கள்.
ஆசியா போட்டியை பின் தொடர இங்கே சொடுக்கவும்
![]() |
Yes! We can do it |
We show the world that we can kick the ball
ReplyDelete